இளைய ராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்க இருக்கின்ற இந்த நிலையில் அதைத் தடுப்பதற்கு பலர் முன்னின்று உழைப்பதாக தெரிகிறது... அதற்காக தமிழனத்தின் தற்போதைய போர் வா(ல்)ள் ஆன சீமான் முதற்கொண்டு அறிக்கை கொடுத்தாகி விட்டது. ((அவர் அறிக்கை விடுவதாக கூறி வாங்கிக் கட்டியது வேறு கதை)) பல முனைகளிலும் இந்த நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களிடம் பசை பிடுங்குவதற்க்கு நடந்த முயற்சிகள் பலவும் தோற்றுப் போன நிலையில் இப்படி ஒரு புதிய சித்தாந்தத்தை கிளப்பி விட்டதாக ; தாங்களே புலிகளின் தத்துப்பிள்ளைகள் எனக் கூறிக்கொள்ளும் சில ஊடகங்களின் மேலே குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன
Trinity Events Inc. என்ற நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் வேறு யாருடைய தலையீடும் இருப்பது உறுதிப்படுத்த முடியாவிட்டாலும், தமிழ் வண் தொலைக்காட்சி மற்றும் அதன் இணை நிறுவனமான வணக்கம் எப்எம் ஊடாக நடத்தப்படும் போட்டி நிகழ்ச்சிகளில் அவற்றுக்கான இலவச ரிக்கற்றுகள் வழங்கப்பட்டதாக அறிய முடிகிறது. அவர்களும் கனடாவில் ஒர் போட்டி ஊடகமாக திகழ்ந்து வருகிறது தெரிந்ததே .. இதனால் ஏற்பட்ட போட்டித்தன்னை இந்த நிலமைக்கு வித்திட்டதா என அஞ்சத் தோன்றுகிறது..
நான் அறிந்த காலத்தில் எத்தனையோ இசை நிகழ்ச்சிகள் புலிகளின் காலத்தில் கார்த்திகை மாதத்தில் ஆலய மற்றும் பொது விழாக்களில் நடந்தேறியுள்ளன அவர்கள் மாவீர் வாரத்தை மட்டுமே அங்கே வரையறுத்திருந்தார்கள். அது அப்படியிருக்க இவர்கள் இப்படி துள்ளுவதே பலருக்கு ஆச்சரியத்தை தந்தாலும் இன்னோரு பக்கம் இளைய ராஜா வருவதே தெரியாமல் இருந்த பலருக்கு இப்போது இப்பிரச்சினையால் போய் சேர்ந்திருக்கிறது. ஆனாலும் ஒர் இசைநிகழ்சியோடு தேசிய உணர்வை இழந்து விடுகிற இனமா எமதினம் சித்தரிக்கப்படுவது மிக வருத்தத்தை அளிக்கத்தான் செய்கிறது.
இது வரை நன்றாக தின்று கொழுத்த பசுக்களுக்கு புலி இல்லை என்று யாரோ சொல்ல கிலி பிடிக்கிறது இப்போது புலியின் தோலைப் போர்த்திய வாறு உறுமிப் பார்கிறார்கள்..
இசைக்கு ஏது எல்லை.. Start Music....
இசைக்கு ஏது எல்லை.. Start Music....
.jpg)
No comments:
Post a Comment